முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் தென்மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி: தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் சாம்பியன்

ராமநாதபுரத்தில் தென்மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி: தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் சாம்பியன்

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் தென்மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி

Ramanathapuram News | ராமநாதபுரத்தில் உள்ள வேலு மாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் முதன்முறையாக தென்மாநில அளவிலானஜுனியர் ஹாக்கி போட்டித் தொடர் கடந்த 19ஆம்‌ தேதி தொடங்கியது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில அளவிலான, ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் கர்நாடகாவை வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி பெற்று தங்கம் வென்றது.

ராமநாதபுரத்தில் உள்ள வேலு மாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் முதன்முறையாக தென்மாநில அளவிலானஜுனியர் ஹாக்கி போட்டித் தொடர் கடந்த 19ஆம்‌ தேதி தொடங்கியது. இந்த போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

ஆடவர் - மகளிர் பிரிவு போட்டிகள்:

இப்போட்டித்தொடரின் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம்பெற்றது.

இதே போல, மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழ்நாடு அணியை, கர்நாடக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆடவர் அணி வீரர்கள்

ஹாக்கி சங்கம் பாராட்டு:

வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரையும் இந்திய ஹாக்கி சங்கமும் தமிழ்நாடு ஹாக்கி சங்கமும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் சாம்பியன்ஷிப் பெற்ற தமிழ்நாடு, கர்நாடகா அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சான்றிதழும் பதக்கமும் வழங்கி பாராட்டினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram