ஹோம் /ராமநாதபுரம் /

சூரிய கிரகணம் 2022 : ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டு இரவு மீண்டும் திறப்பு.. 

சூரிய கிரகணம் 2022 : ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டு இரவு மீண்டும் திறப்பு.. 

ராமநாதசுவாமி கோவில்

ராமநாதசுவாமி கோவில்

Solar Eclipse 2022 : சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று பகல் 1 மணியளவில் சாத்தப்படடு மீண்டும் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது  சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு  பின் இரவு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram | Ramanathapuram

சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று பகல் 1 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது மீண்டும் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு பின் இரவு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல் திறக்கப்பட்டு சுவாமி சன்னதிக்கு பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இன்று பகல் 1 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு பின் 4 மணிக்கு மேல் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்காக சுவாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு புறப்பட்டு மாலை 6 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி தீர்த்தவாரி முடிந்து, நான்கு ரத வீதிகளில் உலா சென்று பின் சுவாமி கோவில் சென்றடைவார்.

இந்நிலையில், இரவு 7 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாள் சன்னதியில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இதனிடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 7 மணி வரை நடை சாத்தப்பட இருப்பதால் திபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்துள்ள ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திருக்கோவிலில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், கோவில் நடை அடைக்கப்பட்டதால் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறுகள் 11 மணி அளவில் மூடப்பட்டதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram, Solar eclipse