Home /ramanathapuram /

2 குழந்தைகள் உட்பட 6 இலங்கைத் தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடி வருகை

2 குழந்தைகள் உட்பட 6 இலங்கைத் தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடி வருகை

ராமநாதபுரம் வந்த இலங்கைத் தமிழர்கள்

ராமநாதபுரம் வந்த இலங்கைத் தமிழர்கள்

இலங்கையிலிருந்து இரண்டு குழந்தைகள் உட்பட 6 இலங்கைத் தமிழர்கள் படகு மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் பல மணி நேரம் சூறைக்காற்றில் தவித்த இலங்கை தமிழர்களை ஹேவர்கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் மரைன் போலீஸார் மீட்டனர். விசாரணை செய்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து, ப்ளாஸ்டிக் படகு மூலம் அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி உட்கார்ந்திருந்தனர். இலங்கைத் தமிழர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேரை ஹேவர்கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் பத்திரமாக மீட்ட மரைன் போலீசார் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர்.

தனுஷ்கோடி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள்


நேற்று இரவு எட்டு மணிக்கு இலங்கை வவுனியா மாவட்டம் பறையாளங்குளம் பகுதியை சேர்ந்த பாலசுகந்தன், அனுஜா, லிங்கேஸ்வரன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 6 மணி அளவில் தனுஷ்கோடி முதல் மணல் திட்டில் வந்திருங்கியுள்ளனர்.

தனுஷ்கோடி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள்


மேலும் தங்களை அழைத்து வந்த படகு தனுஷ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், பல மணி நேரம் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த உடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பற்றுமாறு உதவிகோரி உள்ளனர்.

தனுஷ்கோடி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள்


ராமேஸ்வரம் மரைன் போலீசார் மண்பம் கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து, குழந்தைககளுடன் பல மணி நேரம் மணல் திட்டில் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் ஹேவர்கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் பத்திரமாக மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

தனுஷ்கோடி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள்


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 31 குடும்பத்தைச் சேர்ந்த 109 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி