Home /ramanathapuram /

அழியும் நிலையில் சீதா தீர்த்தம்.. நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை?

அழியும் நிலையில் சீதா தீர்த்தம்.. நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை?

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் சீதா தீர்த்தம்.

Rameshwaram Seetha Theertham : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய புன்னிய தீர்த்தங்களில் ஒன்று இந்த சீதா தீர்த்தம். இது தற்போது சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 66 புன்னிய தீர்த்தங்களின் முக்கிய தீர்த்தம் இந்த சீதா தீர்த்தமாகும். இந்த தீர்த்தமானது தற்போது கிணற்றை காணவில்லை போல தீர்த்தத்தை காணவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு பின்பு கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தங்களில் நீராடிச் செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் முக்கிய தீர்த்த குளங்களான ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், என முக்கிய மூன்று தீர்த்த குளங்கள் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் பகுதியாக உள்ளது.

இதில் சீதா தீர்த்தமானது சில வருடங்களாக எந்த ஒரு பராமரிப்பும் இன்றி குப்பை கொட்டும் பகுதியாக மாறிவிட்டது. இதனால் அந்த இடத்தில் தீர்த்தம் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் அழியும் தருவாயில் உள்ளது.

சீதா தீர்த்தம், ராமேஸ்வரம்


இதையடுத்து, மிகவும் மோசமான நிலையில் சுற்றுப்புற சுவர்கள் இடிந்தும் குப்பைகள் கொட்டப்படுவதுடன், ஓட்டல் கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, பகுதிவாசிகளுக்கு இதனால் நோய் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

சீதா தீர்த்தம், ராமேஸ்வரம்


இரவு நேரங்களில் அங்கு மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற சமூக சீர்கேடான விஷயங்களும்அரங்கேறுகின்றன.  மதுவை குடித்துவிட்டு காலி பாட்டில்களை உடைத்து குளத்தில் வீசிச் செல்கின்றனர் குடிமகன்கள். போதாக்குறைக்கு, பிளாஸ்டிக் குப்பைகளும் அங்கு கொட்டப்படுவதால் குளமானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முக்கிய தீர்த்தகுளம் இவ்வாறு காட்சி அளிக்கின்றது என்று சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரை வரும் பக்தர்கள் மனவேதனை அடைந்து செல்கின்றனர்.

சீதா தீர்த்தத்தை தூர்வாரி, குப்பைகள் அகற்றி, முறையாக பராமரித்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வைக்கும் கோரிக்கையாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி