முகப்பு /ராமநாதபுரம் /

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற பாய்மரக்கப்பல்.. கண்டு ரசித்த மக்கள்!

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற பாய்மரக்கப்பல்.. கண்டு ரசித்த மக்கள்!

X
பாம்பனை

பாம்பனை கடந்த கப்பல்

Pamban bridge | இரண்டு நாட்களாக பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பல்கள் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கடந்து சென்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

பாம்பன் ரயில் தூக்குபாலம் திறக்கப்பட்டதால், நாகப்பட்டினம் நோக்கியும், இலட்சத்தீவை நோக்கியும் மிதவைகப்பல், பாய்மரக்கப்பல் மற்றும் விசைப்படகுகளும் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலமானது ஒரே இடத்தில் நான்கு வழி போக்குவரத்தையும் காணக்கூடிய இடமாகும். இது மண்டபம் நிலப்பரப்புடன்‌ ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இந்த பாலத்தில் வழியாக பெரியவகை கப்பல்களும், விசைப்படகுகளும் அவ்வப்போது தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் கடந்து செல்லும்.

இந்நிலையில், இரண்டு நாட்களாக பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பல்கள் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பாம்பன் ரயில் தூக்குபாலமானது திறக்கப்பட்டு மிதவை கப்பல் நாகப்பட்டினம் நோக்கியும், பாய்மரக்கப்பல் லட்சத்தீவு நோக்கியும் சென்றன. இதற்கு முன்பாக விசைப்படகுகள் பாம்பனில் இருந்து மண்டபம் வடக்கு துறைமுகத்திற்கு தூக்குபாலத்தினை கடந்து சென்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram