Home /ramanathapuram /

Ramanathapuram: பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்..

Ramanathapuram: பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்..

பாம்பன்

பாம்பன் பாலம்

Pamban Bridge: பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் வழியாக கப்பல்கள் கடந்து செல்வதை, பாம்பன் பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் வழியாக தூத்துக்குடியில் இருந்து காக்கிநாடாவிற்கும், பாண்டிச்சேரிக்கும் சென்ற இழுவை மற்றும் பாய்மரக்கப்பல்களை, பாம்பன் பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

    பாம்பன் ரயில் தூக்குப் பாலம் ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நடைபெற்று வருகிறது.

    பயண நேரத்தை குறைக்கவும், எரிபொருளை சிக்கனம் செய்வதற்காகவும், பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து இழுவை கப்பல் ஒன்று காக்கிநாடா செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் இழுவை கப்பல் நங்கூரமிட்டு காத்திருந்தது. இன்று கப்பல்கள் கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்தையடுத்து,  பாம்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இழுவைக்கப்பல் பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டு தூத்துக்குடியில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா நோக்கி சென்றது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி பாய்மரப் படகு ஒன்று பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றது, முன்னதாக மீன்பிடி விசைப் படகுகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மண்டபம் வடக்கு பகுதி துறைமுகத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றது. இதனை பாம்பன் சாலைப்பாலத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன் கடந்து செல்லும் படகுகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி