Home /ramanathapuram /

Ramanathapuram | அரசு மருத்துவமனை கழிவறையில் 7 மாத ஆண் சிசு கண்டெடுப்பு- காவல்துறை விசாரணை

Ramanathapuram | அரசு மருத்துவமனை கழிவறையில் 7 மாத ஆண் சிசு கண்டெடுப்பு- காவல்துறை விசாரணை

ராமநாதபுரம் மருத்துவமனை

ராமநாதபுரம் மருத்துவமனை

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 7 மாத குழந்தை சிசு கருவாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொள்ளும் போது, கழிவறையில் 7 மாத குழந்தை சிசு (கருவாக) இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. பரமக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக பயனடைந்து செல்கின்றனர்.

இதையடுத்து, இன்று காலை வழக்கம் போல் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்ட போது கழிவறையில் ஒரு அட்டைப்பெட்டியில் ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதையடுத்து, மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு துப்புரவு பணியாளர்கள் தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவர் அதிகாரி முத்தரசன் ஆய்வு செய்ததில் கர்ப்பமுற்ற ஏழு மாத ஆண் குழந்தை சிசு என தெரிய வந்தது.

அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உள்ளவர்களிடம் பரமக்குடி காவல்துறையினர் விசாரணை செய்தனர். மருத்துவ அதிகாரி முத்தரசன் புகாரின் பேரில் பரமக்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் குழந்தைசிசு மீட்கப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி