முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 907 வழக்குகளுக்கு தீர்வு! 

ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 907 வழக்குகளுக்கு தீர்வு! 

X
மாதிரி

மாதிரி படம்

Ramanathapuram News : ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 907 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 907 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வழக்காரர்களின் முழு ஒத்துழைப்புடன் வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சமரசதீர்வு மையத்தில் மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்

இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரத்தில் உள்ள மூன்று அமர்வுகளும், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய 7 அமர்வுகளில் நடைபெற்றநிலையில் 2044 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் 907 வழக்குகளுக்கு சமரசதீர்வு காணப்பட்டது, மேலும், விபத்து தொடர்பான வழக்கில் 20 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் சமரசம் ஏற்பட்டு 12 லட்சம் வழக்காளருக்கு வழங்கப்பட்டது.

    First published:

    Tags: Local News, Ramanathapuram