முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக்கல்லூரியில் இரத்ததான முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!..

ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக்கல்லூரியில் இரத்ததான முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!..

X
இரத்ததானமுகாம்

இரத்ததானமுகாம்

Ramanathapuram News | இரத்ததான முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 100-க்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.

ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை கல்லூரியில் நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாமானது கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. இரத்ததான முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு  இரத்தை தானமாக வழங்கினர். இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram