Home /ramanathapuram /

Ramanthapuram | 15 கிலோவரை வளரும் செம்பரா மீனின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

Ramanthapuram | 15 கிலோவரை வளரும் செம்பரா மீனின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

செம்பாரை

செம்பாரை மீன்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்களிடம் பிடிபட்ட செம்பரா மீன் 15 கிலோ வரையில் வளரக்கூடியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் செந்நிறத்திலான வரிப்பாறை என்றழைக்கப்படும் செம்பரா மீன் சிக்கியுள்ளது. இந்த மீனின் சிறப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வர். ஒரு பகல் ஒரு இரவு என் மீன்பிடித்து விட்டு அடுத்த நாள் அதிகாலையில் கரை திரும்புவர். அந்த வகையில் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பியிருக்கின்றனர். இவர்களுக்கு வரிப்பாறை என்றழைக்கப்படும், செம்பரா மீன், 1 டன் வரையில் கிடைத்துள்ளது.

செம்பாரை மீன்


சிவப்பு நிறத்தில் இருப்பதால் இது செம்பரா மீன் என்றழைக்கப்படுகிறது. இந்த செம்பரா மீனானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வாழக்கூடிய மீன் இனம் என்று கூறுகின்றனர்.

செம்பாரை மீன்


கடந்த சில நாட்களாக செம்பரா மீன்கள் வரத்து அதிகளவில் கிடைப்பதாக பாம்பன் மீனவர்கள் கூறுகின்றனர். கடலில் ஏற்படக்கூடிய பருவ மாற்றத்தினால் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வரத்து கிடைப்பதாகவும், தொடர்ந்து இவை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

செம்பாரை மீன்


இது ஆங்கிலத்தில் ரெட் ஸ்னேப்பர் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் உணவுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த மீன் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதாக கூறப்படுகிறது.

இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் உணவகங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கிலோ 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும் திறன் கொண்டது. அதிகபட்சமாக ஒரு மீன் 10 கிலோ எடையில் பிடிபட்டுள்ளதாக மீனவர்களால் கூறப்படுகிறது. மேலும் தடினமான உடலமைப்பை கொண்டு தட்டையாக இருக்கும். பொதுவாக அரை கிலோவில் இருந்து அதிகபட்சமாக 15 கிலோ வரையிலும் இவற்றின் எடை இருக்குமாம்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி