ஹோம் /ராமநாதபுரம் /

தனுஷ்கோடியில் காலநிலை மாற்றம்... அரிச்சல்முனை மணற்பரப்பை சூழ்ந்த கடல்நீர்..

தனுஷ்கோடியில் காலநிலை மாற்றம்... அரிச்சல்முனை மணற்பரப்பை சூழ்ந்த கடல்நீர்..

அரிச்சல்முனை மணற்பரப்பை சூழ்ந்த கடல்நீர்

அரிச்சல்முனை மணற்பரப்பை சூழ்ந்த கடல்நீர்

Ramanathapuram District News : தனுஷ்கோடி அரிச்சல்முனை மணற்பரப்பை மூடிய கடல்நீர், சுற்றுலா பயணிகள் மண்ணில் இறங்கி கடலின் அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தனுஷ்கோடி. இங்கு 1964-லில் ஏற்பட்ட புயலால் அழிந்த இடங்களை காணவும், இப்பகுதியின் அழகை ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து செல்வதுண்டு.

இந்த தனுஷ்கோடி பகுதியில் இரண்டு கடல்கள் அதாவது வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடலும் ஒன்றோடு ஒன்று இணையும் இடமானது அரிச்சல்முனை பகுதியாகும். இந்த பபகுதிகளானது கடல் அதிக நீரோட்டமாகவும், அதிக கடல் சீற்றமும் உள்ள பகுதியாகும்.

இதனால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றிலும் அவ்வப்போது காலநிலை மாற்றத்தினால் கடலின் தன்மைக்கேற்ற காற்றின் வோகத்தினால் கடல் சீற்றம் அடைவதுண்டு.

இதையும் படிங்க : ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... கோவை வழியாக சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..

தனுஷ்கோடியில் அரிச்சல்முனை பகுதி வரை சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்று பார்க்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையால் இறுதி வரையிலும் சாலையை அமைக்கப்பட்டது. அப்போது சில கிலோமீட்டர் தூரம் இடைவெளி விட்டு சாலை அமைக்கப்பட்டிருந்தனர். அந்த இடைவெளியை பகுதி முழுவதும் தற்போது கடலில் நீர் சூழ்ந்து, சிறிய பகுதி மட்டும் மணல் பரப்பாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தெற்கு பகுதியில் கடல்நீர் உள்வாங்கி மணற்பரப்பாகவே காட்சி அளித்திருந்தது. இதில் சுற்றுலா பயணிகள் இரண்டு கடல் சேரும் இடத்தின் அழகை ரசித்துப், மணற்பரப்பில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தும் வந்தனர்.

அரிச்சல்முனை மணற்பரப்பை சூழ்ந்த கடல்நீர்

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. மதுப்பிரியர்கள் தலைத்தெறிக்க ஓட்டம்..

தற்போது, அப்பகுதியில் கடல் காலநிலை மாற்றத்தால் தென்கிழக்கு பகுதியில் நீரின் வேகம் அதிகரித்து அப்பகுதி முழுவதும் கடல்நீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் சாலை வளைவுகளில் நின்றும் மண் அரிப்பை தடுப்பதற்கு போடப்பட்ட கற்கலில் நின்று கடலின் அழகை பார்த்தும், புகைப்படங்கள் எடுத்தும் செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரிச்சல்முனை மணற்பரப்பை சூழ்ந்த கடல்நீர்

மீண்டும் மணற்பரப்பானது ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் நீரின் வேகம் குறையும்போது தான் உருவாகும் என்று தனுஷ்கோடி பகுதியில் நாட்டு படகுகள் மற்றும் கரைவலை மீன்பிடித்தலில் ஈடுபடும் மீனவர்கள் கூறினர்.

First published:

Tags: Dhanushkodi, Local News, Ramanathapuram