முகப்பு /ராமநாதபுரம் /

வேதாளை கடற்கரையில் ரூ.10 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்.. அதிரடியாக செயல்பட்ட கியூபிரிவு போலீசார்!

வேதாளை கடற்கரையில் ரூ.10 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்.. அதிரடியாக செயல்பட்ட கியூபிரிவு போலீசார்!

X
பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

Ramanathapuram News : வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட நிலையில் 256 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட நிலையில் 256 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், சர்வதேச மதிப்பு 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், வேதாளை ஆகிய கடற்கரை பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மண்டபத்தை அடுத்த வேதாளை கடற்கரை அருகே இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூபிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்று கடற்கரையில் சோதனை நடத்தியதில், பதப்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 256 கிலோ தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் கியூபிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டன பொருட்கள் அனைத்தையும் மண்டபம் வன உயிரின வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்து, கடத்தல்காரர்கள் குறித்து வேதாளையில் விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டன கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram