முகப்பு /ராமநாதபுரம் /

உச்சிப்புளியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு, ஆமை 

உச்சிப்புளியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு, ஆமை 

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு

Ramanathapuram | உச்சிப்புளி அருகே 500 கிலோ எடை கொண்ட கடற்பசு, 50 கிலோ எடை கொண்ட  ஆமை கரை ஒதுங்கி உள்ளது. அவற்றை உடற்கூறு ஆய்வு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புள்ளி அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் 500 எடை கொண்ட கடற்பசுவும், 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமையும் கரை ஒதுங்கியது.  அவற்றை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா, பாக்ஜலந்தி உள்ளிட்ட கடல் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு, நட்சத்திர ஆமை, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும், ஜந்து வகையான ஆமைகளும், அரியவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு மற்றும் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் இன்று அதிகாலை கரை ஒதுங்கியது.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் இளைஞர்களுக்கு வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி - தகுதிகள் என்ன?

இதையடுத்து, அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற அப்பகுதி மீனவர்கள் கரை ஒதுங்கிய கடற்பசு மற்றும் ஆமையை பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க 

இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கடற்பசு மற்றும் ஆமையை மீட்டு மருத்துவர்களை வரவழைத்து அவற்றை உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் கடற்கரை ஓரத்திலேயே புதைத்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram