ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தை பசுமையாக்க கைகோர்த்த மாணவர்கள் - சிட்கோ தொழிற்பேட்டையில் 500 மரக்கன்று நடவு

ராமநாதபுரத்தை பசுமையாக்க கைகோர்த்த மாணவர்கள் - சிட்கோ தொழிற்பேட்டையில் 500 மரக்கன்று நடவு

மரக்கன்றுகளை நடவு செய்த மாணவர்கள்

மரக்கன்றுகளை நடவு செய்த மாணவர்கள்

Ramanathapuram District News | ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டினத்தில் தனியார்  பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து சிட்கோ தொழிற்பேட்டையில்  500 மரக்கன்று நடவு செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டினத்தில் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து சிட்கோ தொழிற்பேட்டையில் 500 மரக்கன்று நடவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டமானது மிகவும் வறட்சியான மாவட்டம் ஆகும். இந்த வறட்சியான மாவட்டத்தை பசுமையானதாக மாற்றி, வறட்சியை போக்கும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரும் ஒன்றிணைந்து ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டினம் சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதையும் படிங்க : 50 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

இதில் பல்வேறு வகையான நிழல் தரும் மரங்கள் மற்றும் பழம் தரும் மரங்கள் போன்றவற்றை மாணவ, மாணவிகள் நடவு செய்தனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், மாவட்ட வனக்காப்பாளர் பவான் ஜெகதீஷ் சுதாகர், ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad