முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் பெருங்குளத்தில் தனியார் பள்ளி வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து.. குழந்தைகளுக்கு காயம்..

ராமநாதபுரம் பெருங்குளத்தில் தனியார் பள்ளி வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து.. குழந்தைகளுக்கு காயம்..

X
விபத்துக்குள்ளான

விபத்துக்குள்ளான பள்ளி வாகனம்

Ramanathapuram News : ராமநாதபுரம் பெருங்குளத்தில் தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி வேன் காலையில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்தனர். அழகன்குளம் பகுதியில் இருந்து பெருங்குளம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அதில் பயணித்த மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைகள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வேன் குறைந்த வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram