ஹோம் /ராமநாதபுரம் /

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்.. ராமேஸ்வரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மாரத்தான் ஓட்டம்..

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்.. ராமேஸ்வரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மாரத்தான் ஓட்டம்..

சர்தார் வல்லபாய் பட்டேல்

சர்தார் வல்லபாய் பட்டேல்

Sardar Vallabhai Patel | சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி ராமேஸ்வரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர்படை மாணவர்கள்  ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Rameswaram

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றக்கூடியவரும், முதல் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேலின்,  பிறந்தநாள் அக் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட உத்தரவிட்டது.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட அறிவுறுத்தியதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9வது பட்டாலியன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய மாணவர் படையின் சார்பில் மாணவர்கள் ஒற்றுமை மாரத்தான் ஓட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க:  தஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் தெரியுமா?

இந்த ஒற்றுமை ஓட்டமானது அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி ராமநாதசுவாமி திருக்கோவில் நான்கு ரதவீதிகளிலும், வந்து பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு மாரத்தானில் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒற்றுமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram, Sardar Vallabhbhai Patel