முகப்பு /ராமநாதபுரம் /

மின்கம்பம் இருந்தும் மின்விளக்கு இல்லாத சங்குமால் கடற்கரை.. கடத்தலுக்கு துணையா? என பொதுமக்கள் கேள்வி..

மின்கம்பம் இருந்தும் மின்விளக்கு இல்லாத சங்குமால் கடற்கரை.. கடத்தலுக்கு துணையா? என பொதுமக்கள் கேள்வி..

X
மின்விளக்கு

மின்விளக்கு இல்லாத சங்குமால் கடற்கரை

Sanghumal Beach | சங்குமால் கடற்கரையில் மின்விளக்கு எரியாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட சங்குமால் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதன் வழியாக ஒலைக்குடா கிராமம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.

இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மின்விளக்குகள் அனைத்தும் பழுதாகி ஒருகிலோ மீட்டர் தூரம் வரை மின்கம்பங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதியானது இருண்ட இடமாக உள்ளது.

இதனால் அவ்வப்போது மீனவர்களின் மீன்பிடி வலைகள், டீசல்கள் திருடப்படுவது, மேலும், மர்மநபர்கள் மது அருந்திவிட்டு வலைகள் மற்றும் படகுகளை எரிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மின்விளக்கு இல்லாத சங்குமால் கடற்கரை

ஒலைக்குடா கிராமமானது இப்பகுதியில் இருந்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் வழியாக தான் அந்த கிராமத்துக்கு மக்கள் செல்கின்றனர். வேலைக்கு கடைக்கு சென்று விட்டு இரவில் திரும்பும்போது மிகுந்த பயத்துடன் செல்லும் நிலை உள்ளது. பள்ளி மாணவிகளும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சங்குமால் கடற்கரை வழியாக கடத்தல் நடைபெறுவதாகவும், மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் இரவில் கடத்தலுக்கு துணையாக இருக்கும் என்று மின்விளக்குகள் பராமரிக்காமல், இருள் சூழ்ந்த இடமாக நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளதா என பொதுமக்கள் மீனவர் கேள்வி எழுப்புகின்றனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram