Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு... காரணம் இதுதான்

ராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு... காரணம் இதுதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோப்பேரி மடம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏராளமான உப்பளங்கள் இருக்கின்றன. இங்கே ஆண்டுதோறும் வட கிழக்கு பருவ மழை முடிந்த பிறகு டிசம்பர் முதல் ஏப்ரல், மே, ஜூலை வரை வரை உப்பு உற்பத்தி அதிகம் நடக்கிறது.கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் டன் அதிகமாக தற்போதுஉற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல ஊர்களில் கன மழை பெய்து வருகிறது. தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, மங்கலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் மழை பெய்துள்ளது.

    இதனால், தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரி மடம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அத்துடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளகல் உப்புகளும் மழை நீரில் கொஞ்சம் கொஞ்சாககரைந்து வருகின்றன.

    இவ்வாறு அங்கேஉப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால்,அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி