ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்ததன் நினைவாக சங்குகள் மற்றும் சிற்பிகள் வாங்கி கொண்டு செல்வார்கள் இதனால் ராமேஸ்வரம் சுற்றி எங்கும் சங்கு விற்பனை அமோகமாக நடைபெறும்.
இந்த சங்கு வகைகளை ஆழ்கடலுக்கு சென்று குழிதோண்டி சங்குகளை எடுத்துவிட்டு இதை ஆசிட் வைத்து சுத்தம் செய்து கடைகளில் வைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு தனுஷ்கோடியில் சங்கு, சிற்பி, முத்து போன்ற பொருட்களுடன் சேர்த்து அழகு சாதன பொருட்களை சேர்த்து வெளிமாநிலம் முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தொழில்புரிந்து அசத்தி வருகிறார் கே.எஸ்.பாண்டியன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன், மீன்பிடி தொழில்தான் பிரதான தொழிலாக விளங்கியது. மீன்வளம் அதிகமாக இல்லாத காரணத்தால் தொழிலில் சிறப்பிக்கமுடியவில்லை.
தனுஷ்கோடியில் அரிச்சல்முனை என்கிற ராமர்திட்டு வரை சாலை அமைக்கப்பட்டது, இதையடுத்து, தனுஷ்கோடியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.
மீன்பிடி தொழிலில் இருந்து மாற்று தொழில் வேண்டி சங்கு கடை ஆரம்பித்தேன், சுற்றுலா பயணிகள் வரவேற்பு நன்றாக இருந்தது, வரும் சுற்றுலா பயணிகளின் மூலம் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் விற்பனை செய்ய தொடங்கினேன் நல்ல வரவேற்பை பெற்றது.
சங்குகளில் அதிகமாக விற்பனையாவது பால்சங்கு, வலம்புரி சங்கு, பால்சங்குகள் கோயிலில் வைத்து பூஜை செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள், வலம்புரி சங்கு வீட்டில் பூஜை அறையில் வைத்து விற்பனை செய்ய பயன்படுகின்றனர். கூட்ட நாட்களில் விற்பனை அமோகமாகவும் மற்ற நாட்களில் சுமாராகவும் இருக்கும். வலம்புரி சங்கு 3000 முதல் 3,00,000 வரையிலும் உள்ளது.
வலம்புரி சங்குகள் ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வருகிறது. அங்கு இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஏஜென்டுகள் மூலமாக நமக்கு கிடைக்கிறது. இந்த தொழிலை வைத்து இதை நம்பி 150 குடும்பத்திற்கு மேற்பட்டோர் தொழில் செய்கின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.