ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இப்ராஹிம் நகர் பகுதியில் பாய்மர நாட்டுபடகு போட்டி நடைபெற்றது. கடலோர காவல்படை ஆய்வாளர் பகல் 1.00 மணியளவில் துவக்கி வைத்தார்.
இந்த படகு போட்டி விழாவில் மீனவ சங்க தலைவர் முகம்மது பகுருதீன்,பொருளாளர் முகம்மது பாசித் ஆகியோர் முன்னிலையில் 18 பாய்மர நாட்டு படகுகள் பங்கேற்கும் இந்த படகு போட்டியானது தேவிபட்டினம் கடற்கரையில் துவங்கி பனைக்குளம் வரை 15 கி.மீ தூரம் வரை சென்று திரும்புகின்றனர்.
இந்த போட்டியில் ஒரு படகில் 5 நபர் வீதம் பங்கேற்று நுழைவுக் கட்டணமாக 1000 ரூபாய் செலுத்தி போட்டியில் பங்குபெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 8 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் தேவிபட்டினத்தை சேர்ந்தவர்களான சித்திக் முதல் பரிசும், சிவா இரண்டாம் பரிசும், கசி மூன்றாம் பரிசும், ரமேஷ் நான்காம் பரிசும் பெற்றனர். மேலும், இந்த பாய்மர நாட்டுபடகு போட்டியானது தேவிபட்டினத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.