முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் ஒருநாள் விடுப்பு எடுத்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்..

ராமநாதபுரத்தில் ஒருநாள் விடுப்பு எடுத்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்..

X
வெறிச்சோடிய

வெறிச்சோடிய அலுவலகம்

Ramanathapuram News : ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அலுவலக ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியாளர்களின் கோரிக்கைகளாக ஊதியத்தை உயர்த்தி வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட கணினி உதவியாளர் பணி வரண்முறை செய்தல், அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்த போராட்டத்தில் வலியுறுத்தினர்.

வெறிச்சோடிய அலுவலகம்

மேலும், ஊரக வளர்ச்சி துறையில் இணை இயக்குநர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram