ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் ரப்பர் பலூனை வைத்து படகை ஏற்றும் முறை கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 61 நாட்கள் கொண்ட மீன்பிடி தடைக்காலமானது கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கியது. இந்த மீன்பிடி தடைக்காலத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 2000- ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு விசைப்படகுகள், வலைகள் மற்றும் இதர உபகரணங்கள் பராமரிக்கும் பணியில் மீனவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விசைப்படகுகளை கரைக்கு ஏற்றி மராமத்து பணிகள் செய்து அவ்வளவு எளிதான வேலை கிடையாது, கரைக்கு ஏற்றும்போது சற்று நிலை தடுமாறினால் கூட 80 டன் இருக்கும் விசைப்படகு சாய்ந்து ஆபத்து ஏற்படக்கூடும், விசைப்படகை ஏற்றி இறக்குவதற்கு உயிர்போகி வந்துவிடுமாம்.
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், மீனவர்கள் குறைந்த சிரமத்தில் விசைப்படகுகளை கடலில் இருந்து ஏற்ற இறக்க உதவி வருகிறது இந்த ராட்சத ரப்பர் பலூன்கள். இந்த ரப்பர் பலூன் வைத்து படகை ஏற்றும் முறை ராமநாதபுரம் மாவட்டத்திலேயே பாம்பன் பகுதியில் மட்டுமே முதன் முறையாக கொண்டுவரப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து உரிமையாளர் நேவிஸ் கூறியதாவது, “தூத்துக்குடியில் தான் இந்த ரப்பர் பலூன் மூலம் படகுகள் ஏற்றப்பட்டு வந்தது. அதனை பார்த்து தான் பாம்பனில் அமைத்தோம். தூத்துக்குடிக்கு விசைப்படகுகளை கொண்டு சென்று அங்கு மராமத்து பணிகள் செய்வோம். தற்போது இங்கையே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு செல்வதை விட இங்கு வைத்து பார்ப்பது செலவு மிகவும் குறைவு.
இதில், அதிக திறன் கொண்ட கம்ப்ரஸர் கொண்டு காற்று அடிக்கப்பட்டு விசைப்படகுகளுக்கு இடையே 2 பக்கமும் சரிசமமாக பலூனை வைத்து காற்றடித்து படகை மேல்தூக்கு கரையில் கயிற்றை கட்டி கடலுக்குள் இழுக்கப்படுகிறது. ரப்பரின் வழுவழுப்பால் படகு எளிதாக நகர்ந்து விடும். இதில் 10லிருந்து 15 நபர்கள் ஈடுபடுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒருநாளைக்கு 3 விசைப்படகுகளை ஏற்றுகின்றனர். சிறிய விசைப்படகிற்கு 30,000மும் பெரிய விசைப்படகிற்கு 40,000மும் கட்டணமாக வாங்கப்படுகிறது. ஒரு பலூன் 90 டன் எடை வரை காற்றை அடைத்துக் கொள்ளும். 75, 80 டன் எடை கொண்ட விசைப்படகை 2 பலூன்கள் முன்பும், பின்பும் மாற்றி மாற்றி வைத்து ஏற்றப்படுகிறது. கட்டை வைத்து படகை ஏற்றுவதில் அதிக உடல் உழைப்பு காலதாமதமும் ஏற்படுவதால், நவீன தொழில்நுட்பத்துடன் ரப்பர் பலூன் வைத்து விசைப்படகை கடலில் இருந்து கரைக்கு ஏற்றுவதற்கும், மராமத்து பணிகள் முடித்துவிட்டு மீண்டும் கடலுக்குள் விசைப்படகுகளை இறக்கவும் மீனவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram