முகப்பு /ராமநாதபுரம் /

கரடுமுரடான சாலை.. காவடி எடுக்கும் பக்தர்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் பக்தர்கள் வலியுறுத்தல்!

கரடுமுரடான சாலை.. காவடி எடுக்கும் பக்தர்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் பக்தர்கள் வலியுறுத்தல்!

X
கரடுமுரடான

கரடுமுரடான சாலை

Ramanathapuram News | பங்குனி உத்திரத்தன்று மேலவாசல் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தர்களின் கால்களை பதம் பார்த்து காயங்கள் ஏற்படும் என்பதால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சாலைகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

பங்குனி உத்திரத்தன்று மேலவாசல் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தர்களின் கால்களை பதம் பார்த்து காயங்கள் ஏற்படும் என்பதால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சாலைகளை சரிசெய்ய ராமேஸ்வரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரம் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெகுவிமர்சியாக நடைபெறும்.

கரடுமுரடான சாலைகள்

இந்த பங்குனி உத்திர திருவிழாவில் ராமேஸ்வரம் தீவில் உள்ள புதுரோடு, நடராஜர், கெந்தமாதன பர்வதம், காட்டுப்பிள்ளையார் கோவில், பொந்தன்புளி, செம்மமடம், மெய்யம்புளி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வேண்டுதலுக்கு காப்பு கட்டி சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காப்புகட்டி பால்காவடி, வேல்காவடி, பறவைகாவடி என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என காவடிகள் எடுப்பார்கள்.

இந்நிலையில், லெட்சுமண தீர்த்தம் பகுதியில் இருந்து துளசிபாபாமடத்தெரு, திட்டக்குடி, மார்க்கெட் தெரு, என்.எஸ்.கே வீதி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தது‌. அதன்பின் சாலை கரடுமுரடாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகத்தால் சாலையில் உள்ள குண்டு குழிகளை மூட M-சாண்ட் மணலுடன் கற்களை கலந்து சாலையில் போட்டது.

இதையும் படிங்க : காணாமல்போன நாயை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு - எவ்வளவு தெரியுமா?

இதையடுத்து, காலப்போக்கில் மழைபெய்யும் நேரத்தில் M- சாண்ட் மண் அனைத்தும் கரைந்து ஓடியதால், தற்போது கற்கள் அனைத்தும் பெயர்ந்து நிற்கிறது‌. மேலும், அந்த மண்ணானது தூசியாக அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும்போது கண்களில் தூசி விழுந்தும், மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படி இருக்கும் சூழலில் பங்குனி உத்திரத்தன்று கடும் வெயிலில் காவடி எடுத்து வரும் பக்தர்களின் கால்களை பதம் பார்த்து விடும் என்பதால் அதற்காக நகராட்சி நிர்வாகமும் தேசிய நெடுஞ்சாலையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

top videos

    மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் தரையில் தென்னந்தும்பிகளை போடுவது போல் அன்று ஒருநாள் மட்டுமாவது அப்பகுதி காவடி எடுக்கும் பக்தர்கள் நலன் கருதி தென்னந்தும்பிகளை போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram