ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள்

பரமக்குடியில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள்

பரமக்குடியில்

பரமக்குடியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்

Paramakudi Retired Power Board Employees Protest | பரமக்குடியில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின்போது, தமிழகத்தில் 65 ஆண்டுகால மக்கள் சேவையில் மின்வாரியம் வளர்ந்துள்ளது. வருவாய் பெருகி உள்ளது. மின்வாரிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும்.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!

ஆனால் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு நலத்திட்டங்கள் அளிக்கப்படுவதில்லை என்று 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த போராட்டத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேலாடையின்றி அரை நிர்வாணத்துடன் அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram