ஹோம் /ராமநாதபுரம் /

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த கட்டிடம்.. ராமேஸ்வரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமான பக்தர்கள் கூடம்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த கட்டிடம்.. ராமேஸ்வரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமான பக்தர்கள் கூடம்..

X
பக்தர்கள்

பக்தர்கள் ஓய்வு கூடம்

Ramanathapuram News : ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ள ராமநாதசுவாமி திருக்கோவில் சொந்தமான பக்தர்கள் ஓய்வு விடுதியானது, பயன்பாட்டு இன்றியும் பராமரிப்பு இன்றியும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகில் உள்ளது பக்தர்கள் ஒய்வுக்கூடம். உலக பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

மேலும், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு அனைத்து ஆன்மிக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில், ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயணிக்க கூடிய ரயில்கள் வரும் வரையில் ஓய்வெடுக்க ரயில் நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை மற்றும் லாக்கர் வசதியுடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இரண்டு கட்டிடம் அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க : பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவை பெண் இரும்பு ராடால் அடித்துக்கொலை... தங்கையின் கணவர் வெறிச்செயல்!

இதனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து, திறந்து வைக்கப்பட்டு சிறிது நாட்கள் கழித்து பணிபுரியும் ஆட்கள் பற்றாக்குறையால் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டது. பிறகு ஊரடங்கு காலத்தில் ஞாயிறு மார்க்கெட்டாக செயல்பட்டிருந்தது‌.

பிறகு காலப்போக்கில் பயன்பாடுகள் இன்றியும், பராமரிப்பு இன்றியும் போடப்பட்டதால் சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது. தற்போது ஐயப்பன் பக்தர்கள் வருகை மற்றும் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் தங்கும் விடுதி பற்றாக்குறையால், தங்குவதற்கு வழிகள் இல்லாமல் கடற்கரை, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வாறு உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓய்வு விடுதியை பராமரித்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் சார்பாக ராமேஸ்வரம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram