இன்று மாதாந்திர கூட்டமானது மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் நடைபெற்றது. இதில் பேரறிவாளனை விடுதலை செய்ய உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்து சிறப்பு நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் குணா, ஆணையாளர், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் வசித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசின் சீரிய முயற்சியால் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர். தொடர்ந்து சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் மற்றும் விவாதங்கள் நடைபெற்றது.
மேலும் சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து 8 வார்டு உறுப்பினர் மற்றும் அ.தி.மு.கவினர்., வெளிநடப்பு செய்தனர். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகர் மன்ற குழு கூட்டம் முடிவுற்றது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.