ஹோம் /ராமநாதபுரம் /

மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை..

மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை..

X
பொதுமக்களின்

பொதுமக்களின் அடிப்படை வசதிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்; நகர் மன்ற கூட்டத

Ramanathapuram Municipality meeting | ராமநாதபுரம் நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர், சுகாதாரப்பணி, கழிநீர் வெளியேற்றம் ஆகிய வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என  மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது, இதில் நகர் மன்ற தலைவராக கார்மேகம் உள்ளார். நேற்று நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டமானது நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில், நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதி, குடிநீர்வசதி, பாதாள சாக்கடை திட்டப்பணி விரைந்து முடிப்பது, முறையான தெருவிளக்குவசதி மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை அளித்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நகர் மன்ற உறுப்பினர்கள் நகர் மன்ற தலைவரிடம் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழக அரசு மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும், 33 வார்டு மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அந்த பணிகளை செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram