ஹோம் /ராமநாதபுரம் /

74-வது குடியரசு தினம்- பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு

74-வது குடியரசு தினம்- பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு

X
பாதுகாப்பு

பாதுகாப்பு பணியில் போலீசார்

Ramanathapuram | குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கோவில்கள், கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில், பாம்பன் ரயில் பாலம் ஆகிய முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் போலீசார்

பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிகுண்டு தடுப்பு காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் | தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

மேலும், பாம்பன் சாலை பாலம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், அக்னிதீர்த்த கடற்கரை போன்ற இடங்களில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, குந்துகால் உள்ளிட்ட கடலோர பகுதியில் புலனாய்வு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram