முகப்பு /ராமநாதபுரம் /

கடலாடி ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா.. களைகட்டிய ரேக்ளா ரேஸ்!

கடலாடி ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா.. களைகட்டிய ரேக்ளா ரேஸ்!

X
கடலாடி

கடலாடி ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா

Ramanathapuram News : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஸ்ரீஅரியநாயகி அம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு திருவிழாவினை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தில் பழைமையான ஸ்ரீஅரியநாச்சி அம்மன் ஆலயமானது உள்ளது. இங்கு 46ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயமானது வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சிறிய மாடு, பெரியமாடு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த பந்தயத்தில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை திருவிழா வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 2 பிரிவுகளிலும் வெற்றிபெற்ற மாட்டுவண்டி வீரர்களுக்கு நினைவு பரிசுகள், ரொக்கப்பரிசும், கேடயங்கள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Ramanathapuram