முகப்பு /ராமநாதபுரம் /

பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை.. போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ள ராமேஸ்வரம் மக்கள்..

பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை.. போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ள ராமேஸ்வரம் மக்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Ration Shop | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சிவகாமி நகர்பகுதியில் ரேஷன் கடை புதிதாக கட்டி முடித்து 5 மாதங்களுக்கு மேல் கடந்தும் இன்றும் பயன்பாட்டிற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம்  மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் உள்ள முருங்கைவாடி, ராம தீர்த்தம் வடக்கு, துளசி பாபா மடத்தெரு, வெண்மணிநகர், சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்கள் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிவாசல் தெருவில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இதனால், 9ம் வார்டு மக்களின் சிரமத்தை குறைக்க சிவகாமி நகர் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பல்வேறு மனுக்களை கொடுத்தனர். இந்நிலையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய ரேசன் கடை அமைக்கப்பட்டது.

இந்த புதிய ரேஷன் கடையானது அமைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து ஆறுமாதங்கள் கடந்த நிலையில் இன்று வரை திறக்கப்பட்டவில்லை. இதனால் ரேஷன் கடை பொருட்கள் வாங்க மீண்டும் 2 கிலோமீட்டர் சென்று வாங்கவேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த பகுதி ரேஷன் அட்டைகளை பள்ளிவாசல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து பிரித்து இந்த கடைக்கு மாற்றும் பணிகளும் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக தாசில்தாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதையும் படிங்க : "பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் மீன்" கிளி மீன் பற்றிய சுவாரஸ்யங்கள்!

எனவே, புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலை கடையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் இல்லை என்றால் இந்த வார்டு மக்களை அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறுகின்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram