முகப்பு /ராமநாதபுரம் /

அரியவகை ஆப்பிரிக்கன் கிராஸ் ஆந்தைகள்.. ராமநாதபுரத்தில் மீட்ட வனத்துறையினர்.. 

அரியவகை ஆப்பிரிக்கன் கிராஸ் ஆந்தைகள்.. ராமநாதபுரத்தில் மீட்ட வனத்துறையினர்.. 

X
மீட்கப்பட்ட

மீட்கப்பட்ட அரியவகை ஆப்பிரிக்கன் கிராஸ் ஆந்தைகள்

African grass owl | ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ரமேஷ் திரையரங்கம் அருகில் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இரவு நேரங்களில் வினோதமான பறவையின் ஒலியை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் இடியும் நிலையில் பயன்பாட்டில் இல்லாத வீட்டில் கண்டறியப்பட்ட 5 ஆப்பிரிக்கன் கிராஸ் என்ற அரிய வகை ஆந்தைகள், வனத்துறையினரால் மீட்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ரமேஷ் திரையரங்கம் அருகில் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இரவு நேரங்களில் வினோதமான பறவையின் ஒலிகேட்பதை அறிந்த அப்பகுதியினர் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 5 ஆந்தைகள் இருப்பதை பார்த்துள்ளனர். இந்த ஆந்தைகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் 5 ஆந்தைகளையும் மீட்டனர்.

இந்த ஆந்தைகள் ஆப்பிரிக்கன் கிராஸ் என்ற அரிய வகையைச் சேர்ந்த ஆந்தை இனம் என்றும், ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய வெளிநாட்டு பறவைகளோடு இந்த ஆந்தைகளும் தவறுதலாக இங்கு வந்திருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த 5 ஆந்தைகளை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு, இவைகள் குறித்து ஆய்வுகள் நடத்திவிட்டு காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram