முகப்பு /ராமநாதபுரம் /

புதிய பேருந்து நிலைய பணி.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்..

புதிய பேருந்து நிலைய பணி.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramnad Municipal Administration Notice : ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டும்பணி விரைவில் தொடங்க உள்ளது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் பேருந்து நிலையம் 1986ம் ஆண்டு நகரின் மையப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டது. அப்போதுள்ள மக்கள் தொகைக்கும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கும் போதுமானதாக இருந்தது. இந்த ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டன.

தற்போது முக்கிய சுற்றுலா தலமாகாவும் இருப்பதால் மக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாகவும், பேருந்து எண்ணிக்கை அதிகரித்ததாலும் பேருந்து வந்து செல்லவும், பயணிகளுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் புதிய பேருந்து நிலையம் கட்ட மாவட்ட நிர்வாகம் ரூ.20 கோடி செலவில் விரைவில் கட்டப்பட உள்ளது.

புதிய பேருந்து நிலைய பணி

இதையும் படிங்க : கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வு..! 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்திய கைதிகள்..!

இந்நிலையில், கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளதால் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் சுற்றியுள்ள அனைத்து கடைகளையும் 20-ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து, பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கும் பணி விரைவில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram