ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள், தங்களது உயிரை துச்சமென எண்ணி, கடலுக்குள் சென்று கடல்பாசிகளை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்வாதாரம்பெற்றுவருகின்றனர்.
இத்தகைய வேலையைச் செய்யும் இவர்களை இப்பகுதி மக்கள் கடல்தேவதைகளாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உயிரை பணயம் வைத்து செய்யும் இந்த தொழிலில் போதிய விலை கிடைக்கவில்லை என கடலுக்குள் சென்றுவரும் பெண்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆண்கள் மீன்பிடிக்க சென்றால் பெண்கள் கடல் பாசிகளை எடுக்க கடலுக்கு செல்கின்றனர். தங்கள் உயிரையே பணயம் வைத்து இவர்கள் கடல்பாசிகளை எடுத்து வருகின்றனர்.
இவர்கள் காலநிலை, காற்றின் வேகம் ஆகியவற்றை பொருத்து, ஒவ்வொரு வகையான பாசிகளை எடுப்பார்கள். கட்டகோரை, கற்கம் பாசி, கஞ்சிப்பாசி, மரிக்கொழுந்து போன்ற பாறைகளில் ஒட்டிருக்கும் பாசிகளை எடுப்பார்கள்.
கோடைகாலமான தற்போது, அதாவது மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மரிக்கொழுந்து பாசியின் சீசன் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்காடா, மாங்காடு, சம்பை, வடகாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கடந்த 40, 50 வருடங்களுக்கு மேலாக இவ்வாறு கடல்பாசி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கடல்பாசி சேகரிக்கும் முறை என்பது அதிகாலை நேரத்தில் கடற்கரை பகுதிக்கு சென்று காற்றின் வேகம், கடல் அலை, கண்களில் பாசிகள் தெரிகின்றனவா என்று பார்த்து விட்டு அதற்கு ஏற்றாற்போல் கடலுக்குள் சென்று கடல்பாசிகளை எடுக்கவேண்டும்.
காலையில் தொடங்கும் இந்த பணியானது மாலை வரை தொடரும். இதற்காக பெண்கள் நாள் முழுவதும் கடலுக்குள்ளேயே இருக்க வேண்டும். கிடைக்கும் பாசிகளை கரைக்கு கொண்டுவந்து, வெயிலில் காயவைக்கின்றனர். இந்த கடற் பாசிகளை வாங்குவதற்கு ராமேஸ்வரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.
இந்த வியாபாரிகளிடம் இருந்து பெண்களால் சேகரிக்கப்பட்ட இந்த கடற்பாசிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஒருகிலோ கடற்பாசி ரூ.50-க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
மரிக்கொழுந்து கடல்பாசியானது மிகவும் மருத்துவ தன்மை வாய்ந்தது, மேலும், உணவுப்பொருள் பயன்பாடிற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து மருத்துவமனையில் தையல் போடும் நூல், மருந்துகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள், ஜிகர்தண்டாவில் ஆகியவையும் இந்தவகை பாசிகள் பயன்படுத்தப்படுகிறது.
இதனை மீனவபெண்கள் முழுநேர தொழிலாக உயிரை பணயம் வைத்து இந்த பாசி எடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரை பணயம் வைத்து என்று கூறுவது எதனால் என்றால் பாறைகளில் இருந்து பாசி எடுக்கும்போது பாறைகள் கைகளை கிழிந்துவிடும், மேலும் திருக்கை மீன் வாளை வைத்து கீறிவிடும், சில நஞ்சுள்ள மீன்கள் கடித்து சிலர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவ்வாறு உயிரை பொருட்டாக எண்ணாமல் இவர்கள் எடுக்கும் பாசியானது கிலோ ரூ.50 எடுக்கப்படுவது மனவேதனை அளிப்பதாக கூறுகின்றனர். தற்போதுள்ள விலைவாசி உயர்வில் கிலோ ரூ.50க்கு விற்பனையானல் எப்படி நாங்கள் பிழைப்பது என்றும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இதன் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருந்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram