ஹோம் /ராமநாதபுரம் /

வாரிசு டிக்கெட்டுக்காக விஜய் மக்கள் இயக்க தலைவரின் வீடு புகுந்து கார் சூறை.. சக நிர்வாகிகள் வெறிச்செயல்?

வாரிசு டிக்கெட்டுக்காக விஜய் மக்கள் இயக்க தலைவரின் வீடு புகுந்து கார் சூறை.. சக நிர்வாகிகள் வெறிச்செயல்?

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Varisu Ticket : ராமநாதபுரம் விஜய் மக்கள் இயக்க கௌரவ தலைவரின் வீடு புகுந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து, பயங்கர ஆயுதங்களுடன் காரை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் ராமநாதபுரம் மாவட்டம் விஜய் மக்கள் இயக்க கௌரவ தலைவராக இருந்து வருகிறார். இதற்கிடையில், வாரிசு படம் ரசிகர் காட்சிகள் டிக்கெட் வாங்குவதில் இவருக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு படம் வரும்போது முன்பகை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயபாலனை தாக்க அவரின் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்துள்ளனர்.

மேலும், வீட்டில் ஜெயபாலன் இல்லாததால் அவரின் மனைவியை தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரின் காரை சரமாரியாக உடைத்து, சாலையில் கவிழ்த்து விட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீசார் விசாரணை செய்து ஜெயபாலன் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் கொண்டு மர்மநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‌

First published:

Tags: Crime News, Local News, Ramanathapuram