முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் இரண்டு வருடங்களாக பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகள்: பக்தர்கள் அவதி - தீர்வு கிடைக்குமா

ராமேஸ்வரத்தில் இரண்டு வருடங்களாக பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகள்: பக்தர்கள் அவதி - தீர்வு கிடைக்குமா

X
பூட்டிக்

பூட்டிக் கிடக்கும் கழிவறை

Ramanathapuram | ராமேஸ்வரம் கோவில் அருகே கட்டப்பட்ட கழிவறைகள் இரண்டு ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் இருந்துவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் அருகே இரண்டு வருடங்களுக்கு முன்பு 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடப்பதால் கட்டணம் செலுத்தி செல்லும் அவலநிலை உள்ளது. கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலம் ஆகும். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய இந்த தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய உலகளவில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது. ஒரு இலவச கழிப்பறை மட்டும் உள்ளது. அதுவும் பராமரிப்பு இன்றி உள்ளது.

பூட்டிக்கிடக்கும் கழிவறை 

இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக வடக்கு வாசல் பகுதியில் ஏசி காட்டேஜ் எதிரே உள்ள பகுதியில் ரூ‌.80 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 40-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகள் கட்டப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் பயன்பாடிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

பூட்டிக்கிடக்கும் கழிவறை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில் பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறாமல் பாதியில் இருப்பதால், கழிப்பறையில் இருந்து செல்லும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. அதன்காரணமாக கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.

அண்ணா பிறந்தநாள்: ராமேஸ்வரம் கோவிலில் பொதுவிருந்து- வாக்குவாதமானதால் அ.தி.மு.க புறக்கணிப்பு

பாதாள சாக்கடை பணிகள் முழுமை பெற்றால் பயன்பாட்டிற்கு கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து விட்டு கழிப்பறைகளை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram