ஹோம் /ராமநாதபுரம் /

அசுத்தமான நிலையில் ராமேஸ்வரம் கோவில் சிவதீரத்தம்; கண்டுகொள்ளாத நிர்வாகம்- பக்தர்கள் வேதனை

அசுத்தமான நிலையில் ராமேஸ்வரம் கோவில் சிவதீரத்தம்; கண்டுகொள்ளாத நிர்வாகம்- பக்தர்கள் வேதனை

சிவதீர்த்தக்

சிவதீர்த்தக் குளம்

Ramanathapuram | ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ள முக்கிய தீர்த்தமான‌ சிவ தீர்த்தமானது தற்போது பராமரிப்பு இன்றி பாலிதீன் பைகள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து அசுத்தமாக காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் முக்கிய தீர்த்தமானது இந்த சிவதீர்த்தம் பயன்பாடுகள் இல்லாததால் அசுத்தமாக பாலிதீன் பைகள் குப்பைகள் சூழ்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.

இந்த சிவ தீர்த்தமானது ஆடி திருக்கல்யாணம் மாவிளக்கு பூஜையின் போது பர்வதவர்த்தினி அம்பாளை தீர்த்தவாரி உற்சவம் செய்வது இந்த தீர்த்தத்தில் தான். பொங்கல் மற்றும் சித்திரை மாதம் முதல் நாளில் தீர்த்தவாரி உற்சவம் இங்கு தான் நடைபெறுகிறது.

கோவில் திருக்கோவிலுக்குள் உள்ள ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது அது போன்று இந்த சிவத்திட்டத்தில் பக்தர்கள் நீராடினால் சகல பிணிகளும் நீங்கும்‌ என்பது ஜதீகம். அதாவது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும் என்கின்றனர்.

அசுத்த நிலையில் சிவதீர்த்தம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்த இந்த தீர்த்தம் அம்பாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு இதில் இருந்து தீர்த்தம் எடுத்து வேறு இடத்தில் மாற்றப்பட்டது.

அசுத்த நிலையில் சிவதீர்த்தம்

இந்நிலையில், அன்றிலிருந்து பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து தவிர்க்கப்பட தீர்த்தம் பயன்பாடற்ற தீர்த்தமாக கோவிலுக்குள் காட்சி அளித்தி சுவாமி- அம்பாள் தீர்த்தவாரி உற்சவம் மட்டும் நடைபெற்றது.

அசுத்த நிலையில் சிவதீர்த்தம்

இதையடுத்து, தற்போது இதன் அருகில் கோவிலின் குப்பைகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. அங்குள்ள குப்பைகள் இந்த சிவ தீர்த்தம் குளத்தில் கொட்டப்பட்டு சிவதீர்த்தமானது குப்பை தீர்த்தமாக காட்சி அளிக்கிறது.

சிவ‌தீர்த்ததை பார்க்க செல்லும் பொதுமக்கள் ஆன்மிகவாதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகள் கிடக்கும் இந்த முக்கிய தீர்த்ததை கண்டு மனவேதனை அடைகின்றனர். சிவதீர்த்தத்தை சுத்தம் செய்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram