முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவிலில் மாசி அமாவாசை தீர்த்தவாரி உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரம் கோவிலில் மாசி அமாவாசை தீர்த்தவாரி உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோவில் விழா

Ramanathapuram | ராமேஸ்வரம் திருக்கோவிலில் மாசி அமாவாசை தீர்த்தவாரி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மகாசிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு சுவாமி -அம்பாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று என்பதால் ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா மற்றும் மாசித் திருவிழாக்கள் 10 நாட்கள் விமர்சியாக நடைபெறும். இந்நிலையில், கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 11-ம் தேதி கொடியேற்றப்பட்டு மகாசிவராத்திரி திருவிழா தொடங்கியது.

விழா தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளைகளிலும், சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு வீதி உலா நடைபெற்று வந்தது.

வீதி உலா

இதனைத்தொடர்ந்து, திருவிழாவின் 10-ம் நாளான மாசி அமாவாசையை முன்னிட்டு மதியம் ஒரு மணி அளவில் சுவாமி - அம்பாள் தங்க ரிசப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள் மண்டகப்படி எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி அருள்பாலித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பால், தயிர், பன்னீர், இளநீர் போன்ற எட்டு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பிறகு சிறப்பு தீபாரதணை காண்பிக்கப்பட்டது. அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு புனித நீராடி சென்றனர். இன்று மாலை 7 மணிக்கு மேல் தங்ககொடி மரத்தில் கொடி இறக்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Ramanathapuram