ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் நடத்திய அறிவியல் கண்காட்சி.. கண்டு ரசித்த பெற்றோர்கள் 

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் நடத்திய அறிவியல் கண்காட்சி.. கண்டு ரசித்த பெற்றோர்கள் 

அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள்

அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள்

Rameswaram News : ராமேஸ்வரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய அறிவியல் கண்காட்சியை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி தமிழ்மணி துவக்கி வைத்து மாணவ மாணவியரின் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களிடம் படைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த கண்காட்சியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு 375- க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, மொழி, பாரம்பரியம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் விஞ்ஞான அரங்கம், அறிவியல் அரங்கம், கணித அரங்கம், பாரம்பரிய உணவு வகைகள், இந்தியாவின் முக்கிய இடங்கள், ராமேஸ்வரத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள், அறிவியல் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் அப்துல் கலாம் தேசிய நினைவகம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்டவைகளை  மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். சாலை விதிகளை பற்றி அரங்கம் ஓவிய அரங்கம் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தினர்.

இந்த கண்காட்சி ஆங்கிலம், தமிழ், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் என ஐந்து துறைகளின் கீழ் நடைபெற்றது. இதில் பங்கேற்று தனித்துவமான சிறப்பு படைப்புகளுக்கு ஒவ்வொரு துறையின் கீழ் ஒரு பரிசு வழங்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

First published:

Tags: Local News, Rameshwaram, Tamil News