ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு - எந்த வழியாக செல்கிறது தெரியுமா?

ராமேஸ்வரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு - எந்த வழியாக செல்கிறது தெரியுமா?

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Ramanathapuram District | புண்ணிய ஸ்தலமாக போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கு செகந்திராபாதில் இருந்து ஜனவரி 27ஆம் தேதிவரை வாராந்திர சிறப்பு ரயில் இக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம் (ராமநாதபுரம்).

இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான ராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். புண்ணிய ஸ்தலமாக போற்றப்படும் இங்கே நாடு முழுவதிலும் இருந்து ஏரானமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தென் மத்திய ரயில்வே சார்பில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 25ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில், வருகிற 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும். அதன்படி, செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரயில் (வ.எண்.07695) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (வ.எண்.07696) ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். ரயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க

தற்போது பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மேற்கண்ட ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு பதிலாக ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Ramanathapuram, Special trains, Temple