Home /ramanathapuram /

மகிழ்ச்சி செய்தி: ராமேஸ்வரம்- செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.!

மகிழ்ச்சி செய்தி: ராமேஸ்வரம்- செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமேஸ்வரம் - செகந்திராபாத்  விரைவு சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சேவையானது ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு விரைவு சிறப்பு ரயில் மாதத்திற்கு மூன்று மூன்று முறை இயக்கப்பட்டது. இந்த சேவையானது ஜூலை வரை நீடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது அறிவிப்பு வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்.

ராமேஸ்வரம் செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் எண்(07686) ராமேஸ்வரத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 04, 11, 18 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 07.30 மணிக்குள் செகந்திராபாத் சென்றுவிடும்.

ராமநாதபுரத்திலிருந்து செல்லும் ரயில்


இதையடுத்து, அங்கிருந்து மறுமார்க்கத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 02, 09, 16 ஆகிய செவ்வாய் கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 03.30 மணிக்குள் ராமேஸ்வரம் வந்து சேரும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வியாபாரத்திற்காக வெளி மாநிலம் செல்வோர் சுற்றுலா செல்பவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி