ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | வசூலில் கலக்கிய கில்லி, படையப்பா- மூடப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தியேட்டர் வரலாறு தெரியுமா?

Ramanathapuram | வசூலில் கலக்கிய கில்லி, படையப்பா- மூடப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தியேட்டர் வரலாறு தெரியுமா?

ராமநாதசுவாமி

ராமநாதசுவாமி திரையரங்கம்

Ramanathapuram | ராமேஸ்வரத்தில் திட்டக்குடி தெரு பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக இயங்கி வந்த ராமநாதசுவாமி திரையரங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திட்டக்குடி தெரு பகுதியில் இருந்த ராமநாதசுவாமி தியேட்டர் பற்றி தெரிந்து கொள்வோம். இங்கே என்னென்ன படங்கள் திரையிடப்பட்டது, டிக்கெட்டுகள் எவ்வளவு விலைக்கு விற்பனையானது எதற்காக தியேட்டர் அடைக்கப்பட்டது என்ற கேள்விகள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மூன்று தியேட்டர்கள் இருந்தது. பின்பு காலப்போக்கில் மூன்று தியேட்டர்களும் மூடப்பட்டது. அதில் இரண்டு தியேட்டர்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டது. தற்போது மிஞ்சி உள்ள ஒன்றுதான் இந்த திட்டக்குடி தெருவில் அமைந்துள்ள ராமநாதசுவாமி தியேட்டர்.

இந்த திரையரங்கானாது 1972-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் உரிமையாளர் ஜமால் ராவுத்தர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர். பாம்பன், உச்சிப்புளி, தொண்டி, கீழக்கரை மற்றும் பிற பகுதிகளில் 14 தியேட்டர்கள் இருந்தன.

சிதைந்த நிலையில் ராமநாதசுவாமி திரையரங்கம்

இந்த தியேட்டரானது ராமநாதசுவாமி பெயரில் தொடங்கப்பட்டது. இந்த தியேட்டரில் முதன் முதலில் திரையிடப்பட்ட திரைப்படம் ’தேவரின் தெய்வம்’ ஆகும்.

சிதைந்த நிலையில் ராமநாதசுவாமி திரையரங்கம்

இந்த முதல் திரைப்படம் திரையிடப்பட்ட நேரத்தில் பேருந்து வசதி கிடையாது. அப்போது பாம்பன் ரயில் பாலம்‌ மட்டுமே இருந்தது. ரயிலில் மதுரைக்கு சென்று திரைப்பட பெட்டிகள் வாங்கி கொண்டு வந்து திரையிடப்படும்.

சிதைந்த நிலையில் ராமநாதசுவாமி திரையரங்கம்

இங்கு. சிவகாசி, ஆதி, சுக்ரன், மின்சார கண்ணா, கில்லி, படையப்பா, பாட்ஷா, ஆறு, பிதாமகன், சாமி, அந்நியன், இங்கிலீஸ்காரன், மாயாவி, மஜா, அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, குஷி, சந்திரமுகி, சண்டைக்கோழி போன்ற 1000- திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

கில்லி, படையப்பா ஆகிய படங்கள் தான் அதிக வசூல் எட்டியவை, இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் வணிகர்கள், தொழிலாளர்கள் இந்த தியேட்டரில் திரைப்படம் பார்த்து செல்வார்கள் என்று சிலர் கூறினர்.

இங்கு முதல் நாளில் மூன்று காட்சிகளும் மற்ற நாட்களில் இரண்டு காட்சிகளும் திரையிடப்பட்டன். அப்போது டிக்கெட்டின் விலை மூன்று ரூபாய், ஜந்து ரூபாய், பத்து ரூபாய் வரைக்கும் விற்க்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பெண்களுக்கு தனித்தனியாக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டது.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகள், தொலைக்காட்சியில் நாடகங்கள் போடப்பட்டதில் இருந்து மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நாடகங்களை பார்க்க தொடங்கிய மக்கள் தியேட்டர்களை மறந்தனர்.

இதன் பிறகு திரைப்படத்திற்கு போடப்படும் முதலீட்டில் இருந்து பாதி அளவு வருமானம் கூட வரவில்லை. மிகுந்த நஷ்டத்தில் இயங்கியதால் சிறிது சிறிதாக திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 50 வருடங்களாக இயங்கிய திரையரங்கம், மக்கள் கூட்டம் வராமல் நஷ்டத்தில் இயங்கியதால் கடந்த 2008-ம்‌ ஆண்டு அடைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அப்பகுதியில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram