Home /ramanathapuram /

ராமேஸ்வரம் கோவிலில் ஒரு மாதத்தில் ரூ.1கோடி உண்டியல் காணிக்கை

ராமேஸ்வரம் கோவிலில் ஒரு மாதத்தில் ரூ.1கோடி உண்டியல் காணிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ஒரு மாதத்தில் மட்டும் 1 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. ஒரு மாத உண்டியல் வருமானமாக 1,00,31,878 ரூபாய் ரொக்கம், 88.500 கிராம் தங்கம், 2.310 கிலோ வெள்ளி இருந்தது. கோயிலில் பாதி உண்டியல்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியல் வருமானம் ரூ. 1 கோடியை தாண்டி உள்ளது.

    இன்னும் ஓரிரு வாரத்தில் மீண்டும் கோயிலில் மீதமுள்ள உண்டியல்களும் திறந்து எண்ணப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இப்பணிகளில் கோயிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஏராளமானோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி