Home /ramanathapuram /

Ramanathapuram | சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறிய ராமேஸ்வரம் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி- நடவடிக்கை எடுக்கப்படுமா?

Ramanathapuram | சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறிய ராமேஸ்வரம் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி- நடவடிக்கை எடுக்கப்படுமா?

பக்தர்கள்

பக்தர்கள் தங்கும் விடுதி

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதிகள் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சேதமடைந்த நிலையில் உள்ள குழுமணி கட்டிடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கட்டிடங்களை பராமரித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான தங்கும் விடுதிகள், கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் அமைந்துள்ளது. இதில் ஒன்றுதான் கிழக்கு ரதவீதியில் ராமமந்திரம் வளாகத்திற்குள் அமைந்துள்ள குழுமணி தங்கும் விடுதி.

பல தங்கும் விடுதிகள் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் இதனை இடித்துவிட்டு அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டது.



இதையடுத்து சேதம் அடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எந்தவித பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.

சேதமடைந்த நிலையில் தங்கும் விடுதி


 

இந்த குழுமணி கட்டிடம் சற்று ஒதுக்கு புறமாக இருப்பதால் இங்கு கிழக்கு ரதவீதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க இங்கு இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.

சேதமடைந்த நிலையில் கட்டில்கள்


இதனால் திறக்கப்பட்ட இந்த கட்டிடமானது திறந்தவெளி கழிப்பறையாகவும் மது அருந்தும் இடமாகவும் மாறிவிட்டது. இப்பகுதி முழுவதும் மது பாட்டில்கள் சூழ்ந்து உடைந்த நிலையில் உள்ளது.

சேதமடைந்த நிலையில் கட்டில்கள்


இதனால் தற்போது அதிகளவில் வாகனங்கள் இங்கே நிறுத்தப்படுவதில்லை, இதையடுத்து இங்கு யாரும் வராததால் சமூகவிரோதிகள் சிலர் பகல் நேரத்திலேயே மது அருந்தும் இடமாகவே மாற்றி விட்டனர்.

தங்கும் விடுதிகளில் இருந்த கட்டில் மெத்தை போன்றவை வீணாகி வருகின்றன. தற்போது அதில் சில உடைந்தும் காணப்படுகிறது. இங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லாததால் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக கட்டணத்தில் தனியார் விடுதிகளில் தங்குவதை தவிர்க்க இதுபோன்ற கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லை என்றால் இதை பராமரித்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி