ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையமானது மதுரை கோட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையமானது, புறநகர் இல்லா ரயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை தினந்தோறும் சராசரியாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என 9,000 மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அதிகப்படியான பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூபாய் 90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு, கட்டுமான பணிகளை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான பணியிடங்களில் உள்ள தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடப் பணி நிறைவு பெற உள்ளது. சிமெண்ட் கலவையை கடத்தும் கன்வெயர் தடம் அமைக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் பணிகளை துவக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram