ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ராமேஸ்வரம் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

X
பொதுமக்கள்

பொதுமக்கள் போராட்டம்

Rameswaram News: ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் பொதுமக்களுடன் சேர்ந்து வார்டு உறுப்பினர்கள் இணைந்து கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்ய பல இன்னல்களை சந்தித்து வருவதால் பொதுமக்களுடன் சேர்ந்து வார்டு உறுப்பினர்கள் இணைந்து கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகவும், உலகப் பிரசித்தி பெற்றதாகவும் விளங்கிவரும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து வருகின்றனர்,

இந்நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கோவில் பிரகாரங்களை பல்வேறு இடங்களில் பூட்டி வைத்தும், சில சன்னதிகளை பூட்டி வைத்தும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்களை முறையாக சாமி தரிசனம் செய்ய விடாமல் செய்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை சாமி தரிசனம் செய்யச் சென்ற உள்ளூர் பக்தர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர், சாமி தரிசனம் செய்ய வந்த உள்ளூர் பொதுமக்களை அவமதிக்கும் விதமாக கோவில் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நடந்துள்ளனர்.

இதையடுத்து, கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஒன்று திரண்டு , கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காவல்துறையினர் மற்றும் கோவில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைநடத்தி இரண்டு நாட்களுக்கு உள்ளூர் மக்கள் எந்தவொரு இடையூறுமின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கோவில் அலுவலக முன்பு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Rameshwaram, Tamil News