ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதியாக சேரன் கோட்டை கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது சில மாதங்களுக்கு முன் மழைபெய்து மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி வாகனங்கள் செல்ல செல்ல உடைந்து முற்றிலும் பள்ளமாக உள்ளது.
இதில் சில பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்து சாலைஇருந்ததே தெரியாமல் மணலாக உள்ளது. இந்த மணலில் வாகனங்கள் செல்ல முடியாமல் செல்கின்றன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அருண் கூறியதாவது, ‘கடந்த 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட சிமெண்ட் சாலையானது சேதமடைந்து, சாலை நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் விழுந்தும் உள்ளது. சாலைகள் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தும் சாலையில் கருவேலை மரங்கள் வளர்ந்தும் காணப்படுகிறது.
இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் சாலைகள் இருப்பதால், குடிதண்ணீர் வாகனங்கள் உள்ளே வர சிரமம் அடைகிறது. இதனால் குடிதண்ணீர் வாகனம் தெருவில் ஆரம்பத்தில் நின்று கொள்வதால் பெண்கள் தண்ணீர் குடங்களுடன் அங்கே சென்று தண்ணீர் பிடித்துவிட்டு நடந்து வரும் நிலை உள்ளது.
வயதானவர்கள் தண்ணீர் குடத்தினை தூக்கிவர முடியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சாலை நன்றாக இருந்தால் வீட்டின் வாசலிலை தண்ணீர் பிடித்துக்கொள்ள முடியும்.
அவசரத்திற்கு கூட ஆட்டோ உள்ள வர முடியாத நிலை உள்ளது. முடியாதவர்களை இங்கிருந்து தெருவின் ஆரம்ப பகுதி வரை தூக்கி சென்று அங்கிருந்து ஆட்டோக்களில் ஏற்றிச்செல்கிறோம்.
மின்விளக்குகளும் முறையாக எரிவது இல்லை. குடிதண்ணீர் பைப்புகளும் இல்லை. அடிப்படை வசதி என்பது முற்றிலும் இங்கு தவிர்க்கப்படுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மனு கொடுத்தும், நான் தனியாக சென்றும் மனுவும் கொடுத்துள்ளேன்.
நகராட்சிநிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டும் மனுக்கள் அனைத்தும் குப்பையாக தான் செல்கிறது. ஒரு நடவடிக்கை கூட இதுவரையிலும் எடுத்தது கிடையாது என்றும் என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. நன்றாக பெய்தால் ஆங்காங்கே நன்றாக இருக்கின்ற சாலையும் முற்றிலும் இல்லாமல் போய்விடும், சாலையை சீரமைத்து புதிய சாலையை ஏற்படுத்தி, எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram