முகப்பு /ராமநாதபுரம் /

புதிய பாம்பன் ரயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்- ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை

புதிய பாம்பன் ரயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்- ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை

X
பாம்பன்

பாம்பன் ரயில்வே பாலம்

Rameswaram pamban bridge | ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

நூற்றாண்டுகள் கடந்து இயங்கிய பாம்பன் ரயில் பாலம் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், மறைமுகமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. மேலும், போக்குவரத்திற்கும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.புதிய பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நிலப்பரப்புடன்‌ ராமேஸ்வரம் தீவை இணைப்பது பாம்பன் சாலை பாலமும், ரயில் பாலமும் தான். இந்த பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 23-ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதுஏற்பட்டு ராமேஸ்வரத்துக்கு செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் வராததால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், பிரதான தொழிலாக விளங்கும் மீன்பிடி தொழிலில் மீன்களை இரயில் மூலமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

பாம்பன் பாலம் 

வியாபாரிகள் மதுரை, பெங்களூர், சென்னை போன்ற இடங்களுக்கு சென்று விற்பனை பொருட்களை சரக்கு ரயில்கள் மூலமாக இறக்குமதி செய்து வந்தனர்.

பாம்பன் பாலம்

தற்போது ரயில் சேவை இல்லாததால் மீன் ஏற்றுமதிக்கு தனியாக வாகனங்கள் வாடகைக்கு எடுத்து அனுப்பப்படுகிறது, அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செய்யவும் தனியார் வாகனங்கள் வந்து இறக்குமதி செய்வதால் வாகனங்களுக்கு வாடகைப்பணம் கொடுப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையானது மறைமுகமாக ஏறியுள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கான பணி

மேலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரயில் பாலத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் நடப்பது வழக்கம் தான்.

ராமேஸ்வரத்தில் லெட்சுமணர் தீர்த்தத்தில் விமர்சையாக நடைபெற்ற தெப்பத்தேர் திருவிழா

ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து பராமரித்த வந்த நிலையில் தற்போதும், அதுபோன்று புதிய தொழில் நுட்பத்தின் மூலமாக புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் வரையில்பழைய‌ பாலத்தை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைக்கின்றனர் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.

First published:

Tags: Local News, Ramanathapuram