Home /ramanathapuram /

Ramanathapuram | பாம்பனில் 187 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்: சுற்றுலாத் தலமாக அறிவிக்க மக்கள் கோரிக்கை

Ramanathapuram | பாம்பனில் 187 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்: சுற்றுலாத் தலமாக அறிவிக்க மக்கள் கோரிக்கை

பாம்பன்

பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பனில் உள்ள பழமையான கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க உள்ளூர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
பாம்பனில் உள்ள 187 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும், சுற்றுலாப் பயணிகள் பாம்பன் கடலின் அழகை ரசிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் உள்ள 187 ஆண்டுகள் பழமைவாய்ந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர் உள்ளூர் மக்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் பகுதியில் உலகப் புகழ்பெற்ற 100-ஆண்டுகள் கடந்த பழமையான ரயில் பாலமும் இந்தியாவின் மிக நீளமான கடல்மேல் அமைக்கப்பட்ட சாலை போக்குவரத்து பாலமும் உள்ளது.

கடல் அழகுடன் பாம்பன் கலங்கரை விளக்கம்


இந்தியாவின் காசியை அடுத்து மிக முக்கிய புனிததலம் மற்றும் மிக பிரபலமான சுற்றுலாதலமும் ராமேஸ்வரம் ஆகும். பாம்பன் பகுதியில் ஆங்கிலேயர்களால் 1835- ஆம் ஆண்டு கட்டப்பட்ட 100 அடி நீளமுடைய உருளை வடிவ கலங்கரை விளக்கமாகும்.

பாம்பன் கலங்கரை விளக்கம்


இவை 187- ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான கலங்கரை விளக்கங்களில் ஒன்று. இந்தக் கலங்கரை விளக்கத்திலிருந்து பாம்பனின் ரயில் போக்குவரத்தையும் சாலை போக்குவரத்து பாலங்களையும் கடலையும் தீவின் அழகையும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பாம்பன் கலங்கரை விளக்கம்


இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து மேற்கு பக்கம்‌ பாம்பன் பாலத்தையும், தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் அதில் இருந்து வீசும் சில்லென்ற காற்றும், குருசடைத்தீவு மற்றும் கிழக்கு பக்கத்தில் ராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் கெந்தமாதன பர்வதம் ஆகியவற்றை பார்த்து ரசிக்க முடியும்.

இந்த கலங்கரை விளக்கமானது ஆங்கிலேயர்களால் 1846-ம் ஆண்டு நேவல் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. அப்போது மீன் எண்ணெயும், தாவர எண்ணெயும் எரிபொருளாக பயன்படுள்ளது.

இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வெளிச்சமானது 16 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்து பார்க்க முடியும். இதனால் இது மீனவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. 106 படிகள் கொண்டு சுழல் விளக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒளி தரக்கூடிய ஆற்றல் பெற்றது.

எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட அனுமதித்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒரு சுற்றுலா தளமாக இருக்கும் என்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி