ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் மகர் நோன்பு.. சூரனை அம்பு எய்து வதம் செய்த பர்வதவர்த்தினி அம்பாள்

ராமேஸ்வரத்தில் மகர் நோன்பு.. சூரனை அம்பு எய்து வதம் செய்த பர்வதவர்த்தினி அம்பாள்

ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் மகர் நோன்பு..

Rameshwaram Ramanathaswamy Temple | ராமேஸ்வரத்தில் சம்பை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மகர்நோம்பு திடலில் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர் நோன்பு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Rameswaram

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சம்பை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மகர்நோம்பு திடலில் நடைபெற்ற மகர் நோன்பு நிகழ்ச்சியில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் சூரனை அம்பு எய்து வதம் செய்தார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 25-ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.10 நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.

இதையடுத்து, விஜயதசமியை முன்னிட்டு காலையில் கோவிலின் அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் அம்பாளின் அபூர்வ தங்க ஸ்ரீ சக்கரத்திற்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், மாபொடி, மஞ்சப்பொடி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜையானது நேரடியாக அம்பாளுக்கு சென்றடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

பின்னர் மாலை நேரத்தில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் அருள்மிது பர்வதவர்த்தனி அம்பாள் அன்னபூரனி, துர்க்கை, மகாலெட்சுமி உள்ளிட்ட பல அவதாரங்களில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர் நோன்பு நடைபெற்றது. மகர் நோன்பு நிகழ்ச்சிகாக சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மகர் நோன்பு திடலுக்கு சென்றது. இந்நிகழ்வையொட்டி சுவாமி அம்பாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மகர்நோன்பு திடலுக்கு சென்றதால் ராமநாதசுவாமி திருக்கோவில் நடை மாலை முதல் இரவு வரை சாத்தப்பட்டது.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

இந்நிலையில், சூரனை அம்பு எய்து அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் உள்ளுர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மகர் நோன்பு எய்தல் நிகழ்ச்சி திருக்கோவில் கிழக்கு கோபுர வாசலில் நடைபெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு மகர் நோன்பு நிகழ்ச்சி மகர் நோன்பு திடலில் நடைபெற்றது.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram