ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | ஆசிரியர் பற்றாக்குறையால் தவிக்கும் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி மேல்நிலைப்பள்ளி - நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

Ramanathapuram | ஆசிரியர் பற்றாக்குறையால் தவிக்கும் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி மேல்நிலைப்பள்ளி - நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

பெண்கள்

பெண்கள் மேல்நிலைப் பள்ளி

Ramanathapuram | ராமேஸ்வரத்திலுள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகரில் உள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமேஸ்வரம் துளசி பாபா மடத்தெருவில் ராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான பள்ளியாகும். ஏழை எளிய பெண் குழந்தைகளின் கல்விக் கனவை பூர்த்தி செய்வதில் இப்பள்ளி முக்கிய பங்காற்றி வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது 968 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

கிட்டத்தட்ட 1,000 மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது ஒரு பெருங்குறையாக உள்ளது. 968 மாணவர்களுக்கு 16 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தி வருகின்றனர். 14 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதே போல ஒரு காவலாளி பணியிடமும் காலியாகவே இருந்து வருகிறது.

புகார் அளிக்க வந்த பெற்றோர்கள்

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவிகள் பாடம் கற்பதில் சிரமம் உள்ளது. இதனால் பாடங்களை முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத நிலை தற்போதும் உள்ளது. குறைந்த ஆசிரியர்கள் உள்ள போதிலும் அரசு பொது தேர்வுகளில் மற்ற பள்ளிகளைவிட இப்பள்ளி மாணவிகள் சிறப்பான மதிப்பெண் பெற்று வருகின்றனர். கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் மேலும் சிறப்புவாய்ந்த நிலையை இப்பள்ளி அடையும் என்பதில் சந்தேகமில்லை.

புகார் அளிக்க வந்த பெற்றோர்கள்

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி ராமநாதசுவாமி கோவில் நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்பது பெற்றோர்களின் கூற்றாக உள்ளது. இதற்காக பெற்றோர்கள் சார்பில் ராமநாதசுவாமி கோவில் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram